யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது: இலங்கை தூதர் பேச்சுக்கு பாரதீய ஜனதா கண்டனம் pon radhakrishnan condemned Sri lanka common wealth issue
சென்னை, அக். 25–
தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து இலங்கை தூதர் கரியவாசம் வெளியிட்டுள்ள கருத்து கண்டனத்துக்குரியது. எல்லா முனையிலும் தோற்றுப் போன மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் அவர் பேசி இருக்கிறார்.
எந்த விசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது. பொருளாதாரம், மனித வளம், அறிவியல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் நம்மை சுற்றியே மற்ற நாடுகள் உள்ளன.
சீனா, பாகிஸ்தானை நினைத்து மத்திய அரசு பயப்படுகிறது. இதனால் இலங்கை சீனாவின் தளமாக மாறி வருவதை மத்திய அரசு உணர வேண்டும். வெளிநாட்டு கொள்கையில் துணிச்சலும், சாதுர்யமும் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
No comments:
Post a Comment