மகனை பிரதமராக்கும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவே ஆந்திராவை பிரிக்கும் முடிவை சோனியா எடுத்தார்: சந்திரபாபு நாயுடு chandrababu naidu says sonia bifurcated andhra to make rahul pm
ஐதராபாத், அக். 27-
பயலின் புயலின் எதிரொலியாக ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கு சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களின் நல்வாழ்வு, மேம்பாடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
ஆந்திராவை ஆளும் கிரண் குமார் ரெட்டி சோனியா காந்தியின் கை பொம்மையாக இருந்துக் கொண்டு அவரது பாட்டுக்கேற்றபடி நாட்டியமாடி வருகிறார். இதனால் கடந்த ஒருவருட காலமாக மாநில அரசின் இயக்கமே நின்று போய் உள்ளது.
ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பது போன்ற முக்கியமான விவகாரங்களில் அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடுவதை விடுத்து தன்னந்தனியாக காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.
ஆந்திரவை இரண்டாக பிரிக்கும் முடிவு அரசியல் நோக்கம் கொண்டதாகும். இம்மாநில மக்களின் மனநிலையை அறிந்து எடுக்கப்பட்ட முடிவல்ல இது. தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்கி பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஆந்திராவை இரண்டாக பிரிக்கும் கொடூரமான முடிவை சோனியா காந்தி எடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
No comments:
Post a Comment