தினசரி செய்திகள்

Thursday, October 10, 2013

பிரபு சார் போல் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்: கார்த்தி பேச்சு actor karthi cinema latest news

பிரபு சார் போல் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்: கார்த்தி பேச்சு

by veni
ekuruvi.com is Tamil news, Tamil culture, செய்திகள்
 
கார்த்தி-காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. இப்படத்தை தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த ராஜேஷ் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கார்த்தி, ராதிகா ஆப்தே, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் ராஜேஷ், தயாரிப்பாளர் டி.ஞானவேல்ராஜா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கார்த்தி பேசும்போது,

இயக்குனர் ராஜேஷின் 'சிவா மனசுல சக்தி' படம் பார்த்தபோதே ராஜேஷ் அப்படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு எடுத்திருப்பதை கண்டு வியந்தேன். ராஜேஷின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்போது அது நிறைவேறியுள்ளது.

இந்த படத்தில் 80-களில் நடப்பதுபோன்று காட்சி ஒன்றை அமைத்துள்ளோம். அதில் பிரபு சார் போலவே கெட்டப் அணிந்து, அவரைப்போலவே நடித்துள்ளேன். இதற்காக மிகவும் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இதை நம்மால் சரிவர செய்யமுடியாது என்று விலக நினைத்தேன். ஆனால், இயக்குனர் வேண்டுகோளுக்கிணங்க இதை வெற்றிகரமாக செய்துமுடித்தேன். இப்படம் சிறந்த காமெடி படமாக இருக்கும். காஜல் அகர்வால் இப்படத்தில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். அது மிகவும் உங்களை கவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சூர்யா பேசும்போது, இயக்குனர் ராஜேஷின் இயக்கத்தில் நான் ஒரு படம் பண்ணவேண்டியது. ஆனால், ஒரு எஸ்எம்எஸ்-ஆல் அது நிறைவேறாமல் போய்விட்டது. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை கண்டு வியந்து போனேன். படம் முழுக்க நகைச்சுவையோடு கொண்டு செல்லும் சிறப்பு ராஜேஷிடம் உள்ளது. இவரின் படம் எல்லாத்தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும்.

2 நாட்களுக்கு முன்புவரை உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்த கார்த்தி, இந்த நிகழ்ச்சிக்காக மிகவும் பொலிவுடன் வந்துள்ளார். இதற்கு இந்த படத்திலுள்ள பாசிட்டிவ் எனர்ஜியே காரணம் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

The post பிரபு சார் போல் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்: கார்த்தி பேச்சு appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts