மீடியா நண்பர்களுடன் படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா? நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்?
by admin
TamilSpyToday,
நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு டூப் நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கியிருக்கிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா நசீம் புகார் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் சற்குணம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நய்யாண்டி திரைப்பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றம் ஊடங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், நய்யாண்டி படத்தில் வரும் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நஸ்ரியாவிற்கு பதில் வேறு பெண்ணை வைத்து முழுப்பாடலையும் எடுத்திருப்பதாகவும், டிரைலரில் ஒரு க்ளோஸ் அப் ஷாட்டில் டூப்பை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நான் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா ஆகிய நல்ல தரமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளேன்.
இனிக்க இனிக்க பாடலில் ஒரு இடத்தில் கூட நான் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாவை தவிர வேறு யாரும் இல்லை.
படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது.
நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று சொன்னேன்.
இதற்காக நான் கேரளாவில் இருந்து வர முடியாது. வேறு யாரையாவது வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன் நஸ்ரியாவிற்கு இப்ப என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒரு வேளை தன்னுடைய Marketing publicityகாக கூட செய்திருக்கலாம்.
ஒரு வேளை நஸ்ரியாவிற்கு டிரைலரில் வரும் அந்த ஒரு க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நான் நீக்கவும் தயார். ஆனால் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா?
இந்த படத்திற்கு U CERTIFICATE கிடைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன். இது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடிய FAMILY ENTERTAINING FILM
இவ்வாறு சற்குணம் கூறியுள்ளார்.
Show commentsOpen link
No comments:
Post a Comment