பள்ளியில் வாய் பேசமுடியாத இளம்பெண் கற்பழிப்பு: ஆசிரியர் கைது
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,
மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ளது குட்டையூர். இங்கு நேயம் ஊனமுற்றோர் பள்ளி உள்ளது. இங்கு கை, கல் மற்றும் வாய் பேசிமுடியாத, மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் படித்து வருகிறார்கள். மேலும் இது காப்பகமாகவும் செயல்பட்டு வருகிறது.
இங்கு பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன் வணங்காமுடி (வயது57) என்ற தொழிற்கல்வி ஆசிரியர் இந்த பள்ளிக்கு நியமிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன் தொழில்கல்வி ஆசிரியர் அங்கு தங்கியிருந்த பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 20 வயது பெண்ணை கற்பழித்தார்.
இந்த சம்பவத்தை நிர்வாகம் மறைத்து விட்டதாக தெரிகிறது. கோவையில் இருந்து சேவா சங்கம் மூலம் மளிகை பொருட்கள் இந்த பள்ளிக்கு வழங்குவது வழக்கம். இதுதான் தக்க தருணம் என்று நினைத்த பார்வதி மளிகை பொருட்கள் கொண்டு வந்தவர்களிடம் சைகையாலும் அங்க அசைவுகளாலும் தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீருடன் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த சேவா சங்கத்தினர் இது குறித்து கோவை மக்கள் நல சேவா சங்கத்தலைவர் குருமூர்த்தியிடம் கூறினார். அவர் காரமடை போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தொழிற்கல்வி ஆசிரியர் வணங்காமுடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post பள்ளியில் வாய் பேசமுடியாத இளம்பெண் கற்பழிப்பு: ஆசிரியர் கைது appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
No comments:
Post a Comment