கூடங்குளம் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்கும் முடிவு ஒத்திவைப்பு: உதயகுமார் பேட்டி kudankulam issue decided to meet CM adjourned
Tamil NewsYesterday,
ராதாபுரம், அக்.7–
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
சில சமூக விரோத சக்திகள் தொடர்ந்து இரவு நேரங்களிலே இடிந்தகரை ஊருக்குள் உள்ளேயும், வெளியேயும் நாட்டு வெடி குண்டுகளை வீசி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அணுஉலை போராட்டக்குழு தமிழக முதல்வரை சந்தித்து பயங்கரமான சதி திட்டங்கள் பற்றியும், மக்களை அச்சுறுத்துவது, மக்களை பிளவுபடுத்துவது, சாதி–மத நச்சு விதைகளை பரப்புவது போன்ற செயல்பாடுகள் பற்றி முறையிடுவது சம்பந்தமாகவும், கூடங்குளம் அணுஉலை குறித்தும், கனிம மண் கொள்ளை குறித்தும் முதலமைச்சரிடம் முறையீடு செய்வதாக திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் முதலமைச்சரை சந்திப்பதற்கான நேரம் இன்னும் கனியாத காரணத்தால் சமுதாய தலைவர்கள், ஊர் மக்கள் போராட்டக்குழுவிடம் முதல்வரை சந்திக்க சென்னை செல்கின்ற திட்டத்தை மற்றொரு நாளுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறினர். இதனால் மக்களுடைய வேண்டுகோளை ஏற்று சென்னை செல்லக்கூடிய பயணத்திட்டம் மற்றொரு நாளைக்கு ஒத்தி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment