எழுதிக் கொடுத்ததை படிக்கும் 'அப்பாவி குழந்தை' ராகுல்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் கிண்டல் Rahul an innocent child who reads whatever given to him Azam
Tamil NewsYesterday,
பதான், அக். 12-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மதக்கலவரத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்தோர்களை நேற்றிரவு சந்தித்து விட்டு திரும்பிய உ.பி. அரசின் கேபினட் மந்திரிகளில் ஒருவரான ஆசம் கான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவர் கூறியதாவது:-
ராகுல் ஒரு அப்பாவி குழந்தை என ராம் தேவ் கூட கூறியிருக்கிறார். ஆனால் நான் சொல்கிறேன். அவருக்கு என்ன எழுதிக்கொடுக்கிறார்களோ அதை படிக்கும் ஒரு அப்பாவி குழந்தை அவர். தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், மரம் அறுக்கும் பட்டறையை ஒட்டுப்பலகை தொழிற்சாலை என்று கூறுகிறார். சமாஜ்வாடி அரசுதான் கலவரத்தை தூண்டிவிட்டு வருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கு மதக்கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் அடிக்கல் நாட்டியுள்ளது.
50 வருடங்களுக்கு மேலாக ஆண்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் நாட்டில் பல மதக்கலவரங்கள் நடந்துள்ளன. மதக்கலவரத்தின் போது அகிலேஷ் யாதவ் அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment