சிறையில் உள்ள காதலனுக்கு புறாமூலம் செல்போன் அனுப்பிய காதலி !
by கதிர்
சிரிப்பு Archives |
இளம்பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது காதலருக்கு புறா மூலம் செல்போனை அனுப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:
பிரேசிலை சேர்ந்த பெண் கிறிஸ்டெலி மாம்சா (வயது 21). இவருடைய காதலன் வாம்பினேர்(வயது 19) போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனால் காதலனை இழந்து தவித்த கிறிஸ்டெலி, புறாவின் மூலும் செல்போனை கட்டி சிறை வளாகத்திற்குள் அனுப்பினார்.
ஆனால் புறாவினால் சிறை மதில் சுவரை தாண்ட முடியாததால், சோர்வடைந்த அது ரோந்துப்படை அதிகாரியின் முன் போய் விழுந்து விட்டது. புறாவையும், செல்போனையும் கைப்பற்றிய அதிகாரி அதை ஏவியவர்கள் யார்" என்பதை கண்டுபிடிக்க வெளியே ஓடி வந்தார். அங்கு கிறிஸ்டெலி ஒரு ஆணுடன் மற்றொரு புறாவையும் கையில் வைத்தபடி நின்றார்.
அந்த புறாவிலும் ஒரு பாட்டிலை கட்டி அதனுள் செல்போன் பேட்டரி, ஜிப் மற்றும் ரொக்கப்பணம் 120 பவுண்ட் வைத்து அதையும் சிறைக்குள் ஏவ தயாராக நிற்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளம்பெண்ணையும், அவளுடன் நின்ற சில்வா(35) என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இரண்டு பேர் மீதும் சிறைக் கைதிக்கு சட்டத்தை மீறி பொருட்களை அனுப்ப முயற்சி, விலங்குக்கு கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post சிறையில் உள்ள காதலனுக்கு புறாமூலம் செல்போன் அனுப்பிய காதலி ! appeared first on Tamilsway.
Show commentsOpen link
No comments:
Post a Comment