நய்யாண்டி படத்துக்கு ஆப்பா?
by abtamil
Tamil newsToday,
நய்யாண்டி படத்தை ரிலீசுக்கு முன் எனக்கு போட்டுக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் படத்தை நிறுத்த வேண்டும், என படத்தின் நாயகி நஸ்ரியா நஸீம் கமிஷனரிடம் வற்புறுத்தியுள்ளார். நஸ்ரியா இன்று பிற்பகல் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு எதிராக புகார் கொடுத்தார். அப்போது நய்யாண்டி படம் வெளியாகாமல் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவரது குற்றச்சாட்டின் முக்கியமான பகுதி இது: நான் நடித்த நய்யாண்டி படத்தில் என் அனுமதி இல்லாமல், நான் நடிக்காத பகுதியை நடித்தது போல காட்டியுள்ளனர். இது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் சார்ந்த மதத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இயக்குநர் சற்குணம் இதன் மூலம் மோசடியானவர் என்பது அம்பலமாகியுள்ளது. இதுபோல மேலும் எத்தனை காட்சிகளை படத்தில் வைத்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் திகதி வெளியாகிறது. அதற்கு முன் அந்தப் படத்தை எனக்கு முழுவதுமாகப் போட்டுக் காட்டி,நான் ஆட்சேபிக்கிற காட்சிகளை தூக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் வெளியாவதையே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் என் குடும்பமும் மதமும் ரசிகர்களும் கடுமையாக எதிர்ப்பார்கள்.-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் நஸ்ரியா.
Show commentsOpen link
No comments:
Post a Comment