"தமிழ்நாட்டு மச்சான் தான் நமக்கு செட்டாவார்" : நமீதா அதிரடி முடிவு
by abtamil
Tamil newsYesterday,
மச்சான்ஸ், மச்சான்ஸ் என்றாலே அது நமீதா டிக்ஸ்னரியில ரொம்ப ஸ்பெஷலான வார்த்தை தான். 'எங்கள் அண்ணா'வில் பார்த்த நமீதாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சுற்றல்ல, பல சுற்று பெருத்துப் போய்விட்ட அவருக்கு நடிப்புக்கு கேப் விட்டு ரெண்டு, மூணு வருஷமாகியும் இன்னும் புதிய பட வாய்ப்புகள் கிடைத்தபாடில்லை.
ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் கடைத்திறப்பு, ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் என பல வேலைகளை கொடுத்து அவரை இப்போதும் பிஸியாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் படங்களில் நடிக்க தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் நமீதா திடீரென்று தீவிர அரசியலில் இறங்கப்போகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் கிளம்பின.
இதுபற்றி அவரிடம் கேட்டால் அவரும் அதை மறுக்கவில்லை.
"ஆமாம், எனக்கு திடீரென பொலிடிக்கல்ல ரொம்ப இண்ட்ரெஸ்ட் வந்திருக்கு. போன வருஷமே எனக்கு பொலிடிக்கல் மேல இண்ட்ரெஸ்ட் ஆரம்பிச்சிடுச்சு. ஆனா நான் பொலிடிக்கல்னு இறங்கினா அது தமிழ்நாட்டு பொலிட்டிக்கல்ல தான் இறங்குவேன்.
ஏன்னா, நான் இங்கேதான் வாழ்கிறேன். இங்கேதான் டாக்ஸ் கட்டுறேன். தமிழ்நாட்டுக்கு வந்து 10 வருஷமாச்சு. அதனால நான் பக்கா சென்னை பொண்ணா மாறிட்டேன். ஒரு தமிழ்நாட்டுக்காரரை என்னோட வீட்டுக்காரரா செலெட்க் பண்ணிட்டு இங்கே தான் செட்டிலாகப் போறேன்.
என்று அடுத்தடுத்து வெடிகுண்டுகளைப் போடுகிறார் நமீதா.
Show commentsOpen link
No comments:
Post a Comment