மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது
by Marikumar
ஒடிசாவில் சம்பவம்; பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
வரதட்சணை போதாமை, கள்ளத் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்..!
புவனேஸ்வர்: வரதட்சணை போதாமை, கள்ளத்தொடர்பு சந்தேகம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தில் தன் மனைவிக்கு மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து கொடுமைப்படுத்திய கொடூர கணவரொருவர் ஒடிசாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடுமைக்கு உள்ளான பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரை சேர்ந்தவர் ரஞ்சன் பாண்டா (வயது 32). இவரின் மனைவிக்கு 28 வயதாகிறது. ஏழு வயதில் மகன் ஒருவரும் இருக்கிறார்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் ரஞ்சன் பாண்டாவுக்கு திருமணம் இடம்பெற்றது. இதன்போது, தனக்கு போதுமான வரதட்சணை கொடுக்காததாலும், வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தாலும் மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் பெருந்தவிப்பிற்குள்ளான அவர் மனைவி, ஒருநாள் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பில் பொலிஸார் விசாரித்த போது, 'இனிமேல் கொடுமைப்படுத்த மாட்டேன்' என வாக்குறுதி அளித்து, மனைவியை தன்னுடன் அழைத்து வந்தார் பாண்டா. ஆனால், அதன்பின்னர் அவ ரின் கொடுமை அதிகரித்தது.
கடந்த 24 ஆம் திகதி இரவு மனைவி க்கு மயக்க மருந்து கொடுத்த பாண்டா, சுயநினைவை இழந்ததும் அவரின் தலையை மொட்டை அடித்தார்.
அதன்பின்னர், பழுக்கக் காய்ச்சிய ஆணி யால் மனைவியின் கன்னத்தில் இருந்த மச்சத்தையும் அகற்றி, உடைந்த மின்குமிழ் ஒன்றினால் அவரின் வயிற்றை குத்தியதோடு, பிறப்புறுப்பையும் நூல் மூலம் தைத்தார். இதன்பின்னர், அப்படியே இறக்கட்டும் என விட்டு விட்டார்.
இந்தத் தகவலை எப்படியோ அறிந்த பாண்டாவின் குடும்பத்தினர், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அப்பெண்ணை சேர்த்தவுடன் பொலிஸு க்கு பயந்து அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு தகவல் கொடுத்ததைத்தொடர்ந்து அவர் பொலிஸில் புகார் கொடு த்தார். இதனையடுத்து, பாண்டா கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, கொடுமைக்கு ஆளான பெண், மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Share |
Show commentsOpen link
No comments:
Post a Comment