தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது – ரஜினி ஆவேச பேச்சு!
by abtamil
16 வயதினிலே பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதாவது:–
தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம் நான் இந்த படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு நேரடியாக வரும் என்றால் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றேன்.
ராஜ்கண்ணு சினிமாவில் மரியாதைக்குரியவர். சுயமரியாதை உள்ளவர். கர்வம் கிடையாது. 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெற்றது. கமல் அப்போது பெரிய நடிகராக இருந்தார். படம் நன்றாக ஓடியது சந்தோஷமாக இருந்தது.
மனிதர்களுக்கு கஷ்டகாலம் வரும். கெட்ட காலம் வரும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது.
தற்போது '16 வயதினிலே' மீண்டும் ரிலீசாக உள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இந்த படத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும். இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
Show commentsOpen link
No comments:
Post a Comment