மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் அரசியல் தலைவர்கள் !!
by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today
அனைத்து நாடுகளிலுமே மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத்தில் உள்ளோர் ஜாலியாக குடும்பத்துடன் ஊர் சுற்றுவது வாடிக்கையே என்ற போதிலும் கூட தற்போது கனடாவில் இதனை எதிர்த்து சிலர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட எம்.பி. ஆண்டு செலவு அறிக்கைப்படி கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனைவிகளின் விமானப் பயணச் செலவுக்கு 2.2 மில்லியன் டாலர்களும், அவர்களின் குழந்தைகளின் விமானப் பயணச் செலவுக்கு 554.000 டாலர்களும் செலவிட்டதாகத் தெரிகிறது.
வரி கண்காணிப்பு குழுக்கள் இது போன்ற செலவுகள் பற்றிய அறிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்கின்றனர். மேலும் ஒரு முக்கிய மத்திய பொதுத்துறை தொழிற்சங்க தலைவர் பேசுகையில், பொது ஊழியர்கள் தங்களது மனைவியரை இலவசமாகப் பயணத்தில் அழைத்துச் செல்லும் நிலை இல்லாத போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படக் கூடாது எனக் கூறி கடுமையாகச் சாடினார்.
இந்த அறிக்கையில் தனிப்பட்ட பயணங்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான பணம் ஒட்டாவாவுக்கு பயணச் செலவுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் அதிகமாக முன்னாள் லிபரல் கட்சித் தலைவர் பாப் ரே குடும்பப் பயணச் செலவு 56,919.57 டாலர்கள்.
அடுத்து பிரிட்டிஷ் கொலம்பியா கன்சர்வேடிவ் எம்.பி. ரிச்சர்ட் ஹாரிஸ் செய்த செலவு 51,773.63 டாலர்கள். அடுத்து வான்கூவர் கிழக்கு NDP எம்.பி. லிப்பி டேவிஸ் செய்த செலவு 49,618.09 டாலர்கள்.
இதை ஒப்பிடும்போது பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது மனைவி லாரீன் ஹார்ப்பர் ஆகியோரின் பயணச் செலவே 34,107.33 டாலர்கள் தான். பெரும்பாலும் இந்தச் செலவினங்கள் பிரதமரின் நியமிக்கப்பட்ட பணிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என ஹார்பரின் தொடர்பு இயக்குனர் ஜேசன் மெக்டொனால்ட் கூறினார்.
இது போக இங்கு குறிப்பிட்ட விமானச் செலவுகளில் அரசு விமானத்தில் பயணம் செய்த செலவுகள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் அரசியல் தலைவர்கள் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
No comments:
Post a Comment