வசூல் வேட்டையில் ராஜா ராணி!
by abtamil
Tamil newsToday,
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம் ரஜா ராணி.
அட்லீ இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா முதலானோர் நடிப்பில் வெளியாகியுள்ளது.
இப்படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வெளியாகி இதுவரை 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி தொடர்ந்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வருடம் வெளியான படங்களில் வசூலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறதாம் இந்த ராஜா ராணி.
அது மட்டுமல்லாமல் இதுவரை ஆர்யா நடித்து வெளியாகிய படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையும் ராஜா ராணி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தயாரித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
Show commentsOpen link
No comments:
Post a Comment