தமிழ் சினிமாவின் புதிய அக்கா, தங்கை
by admin
TamilSpyToday,
தமிழ் சினிமாவுக்கு லலிதா-பத்மினி-ராகினி, அம்பிகா-ராதா, ஊர்வசி-கல்பனா என கேரளாவில் இருந்து சேச்சிகள் வந்தார்கள். சிம்ரன்-மோனல், நக்மா-ஜோதிகா, காஜல் அகர்வால், நிஷா அகர்வால், ஆகியோர் வடக்கிலிருந்து வந்தார்கள். இப்போது ராதா மகள்கள் கார்த்திகா, துளசி வந்திருக்கிறார்கள். அடுத்து ஓசைப்படால் ஒரு தெலுங்கு சகோதரிகள் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அது ஸ்ரீரம்யா-ஸ்ரீதிவ்யா சிஸ்டர்ஸ்.
ஸ்ரீரம்யா, தெலுங்கில், '1940ல ஒக்க கிராமம்' என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே மொட்டை அடித்து நடித்து ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான நந்தி விருது பெற்றார். பிறகு தமிழில் 'யமுனா' என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் சரியாக போகாததால் மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பி விட்டார். அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இவரின் தங்கை ஸ்ரீ திவ்யா, 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்' அறிமுகமாகியிருக்கிறார். அக்காளுக்கு அடிக்காத யோகம் தங்கைக்கு அடித்திருக்கிறது. இப்போது ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. சகோதரிகளுக்கு இருக்கும் ஒரே ஆசை இருவரும் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம்.
அதிசயமான மனிதர்கள் – வீடியோ…
Show commentsOpen link
No comments:
Post a Comment