நானோ என் மகன்களோ பதவிக்காக அலையவில்லை: சிறைப்பறவை லல்லுவின் மனைவி பேட்டி Rabri claims she is not craving for post
Tamil NewsYesterday,
பாட்னா, அக்.2-
கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் குஜராத் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி, நானோ என் மகன்களோ பதவிக்காக அலைபவர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
சி.பி.ஐ. அதிகாரிகள் ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி என் கணவரை சிறைக்கு அனுப்பி விட்டனர்.
பீகாரின் தற்போதைய ஆட்சியில் 900 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல் மந்திரி நிதீஷ்குமார், சிவானந்த் திவாரி, ராஜீவ் ரஞ்சன் ஆகியோருக்கும் என் கணவருக்கு விதிக்கப்பட்டது போல் தண்டனை வழங்கப்படுமா? என்பதை அறிந்துகொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள்.
தனது அரசியல் எதிரிகளின் சதிக்கு என் கணவர் எப்படி இரையாகி விட்டார் என்பதை விளக்க நானும் என் மகன்களும் பீகார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன்.
நானோ, என் மகன்களோ கட்சி பதவிக்காக அலையவில்லை. எங்களுக்கு கட்சியின் எந்த பதவியும் தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, லல்லு பிரசாத் யாதவ் நேற்று முன்தினம் சிறைக்கு சென்றபோது பேட்டியளித்த ரப்ரி தேவி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதுபோல் நானும் என் மகனும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை வழிநடத்தி செல்வோம் என்று கூறியது நினைவிருக்கலாம்.
கால்நடை தீவன ஊழல் தொடர்பாக லல்லுவின் மீது வழக்கு தொடரப்பட்ட வேளையில் லல்லுவுக்கு பதிலாக பீகாரின் முதல் மந்திரியாக ரப்ரிதேவி பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment