தினசரி செய்திகள்

Tuesday, October 1, 2013

நாடு வல்லரசாகிறதாம்! Tamil special news

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர

by tnkesaven

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர்
நான் நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுவது வயது இருக்கும். கையில் ஒரு கொம்புடம் நடந்து வந்தார்.
ஒரு பிச்சைக் காரன் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக் காரருக்கு ஆத்திரம் வந்தது.. செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று திட்டிய படி சென்றார்.. என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்.
பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானமா பத்து ரூபாங்கற என்றார்... பெரியவரே எந்த லோகத்துல இருகிங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துறது... போங்க பெரியவரே என்று அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்.
அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..?? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக்கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடுப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசிகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. மலிவு விலை உணவகத்தில் ஏழைகுக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பணக்காரர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்பார்கள். பிச்சைக் காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன்.
முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிகிறீங்க என்று கேட்டேன். முப்பது நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்ப்பது ஆண்டுகளில் இந்தியா இவளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை.
என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி
ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம்,
பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்...
இதற்கு பெயர் முன்னேற்றமா???

அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்..

இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்...
என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம்,
இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது
இதற்க்குப் பேர் முனேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்...

அவர் பார்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது அனைத்துமே மறுக்க முடியாது உண்மை
newsindianews.com

Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts