முன்னாள் தலைவரின் பங்களாவில் செக்ஸ் விருந்துகள்
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,
இங்கிலாந்தில் உள்ள மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கு சொந்தமான முன்னாள் பங்களாவில் ஆபாச காட்சிகள் அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் சுர்ரே கில்ட்போர்ட் பகுதியில் ராக்வுட் ஹவுஸ் என்ற பெரிய பங்களா உள்ளது.
இந்த பங்களா கடந்த 1995ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பெனாசிர் பூட்டோவுக்கு சொந்தமானதாக இருந்தது.இந்த பங்களாவில் முன்பு பெனாசிரின் கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி, உலகத் தலைவர்கள் பலருக்கு ஆடம்பர விருந்துகளை நடத்தியுள்ளார்.தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த பங்களாவின் விலை 80 மில்லியன் பவுண்டு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பங்களாவை ஆடம்பர விருந்துகளுக்காக பயன்படுத்தி வருகிறார்களாம்.அதாவது இரவு நேரங்களில் செக்ஸ் விருந்துகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் டென்னிஸ் போட்டியிலும் இங்கு ஆண், பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.சமீபத்தில் இந்த பங்களாவின் உரிமையாளர் 2 நாள் திருவிழா ஒன்றை நடத்தினார்.அதற்குப் பெயரே பாவத் திருவிழா 'mini festival of sin' என்பதாகும்.உலகத் தலைவர்கள் பலருக்கும் ஆடம்பர விருந்து வழங்கப்பட்ட இந்த பங்களாவில் இவ்வாறு நடப்பது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post முன்னாள் தலைவரின் பங்களாவில் செக்ஸ் விருந்துகள் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
No comments:
Post a Comment