அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதி: விரைவில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு Anna Hazare hospitalized to be operated soon
புதுடெல்லி, அக்.15-
பெருகிவரும் ஊழல்களுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரே புனேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிராஸ்டேட் சுரப்பி எனப்படும் சிறுநீர் குழாய் தொடங்கும் இடத்தில் உள்ள சுரப்பியில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் வகையில் அவருக்கு விரைவில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.
ஏதாவது ஒரு பிரச்சனையை முன்வைத்து 76 வயதாகும் அன்னா ஹசாரே அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் மார்பக தொற்று நோயால் அவதிப்பட்ட அவருக்கு புனேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது சிறுநீர் குழாய்க்கு முன்நிற்கும் (புராஸ்டேட்) சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மீண்டும் புனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்தக்கொதிப்பு நிலை சீரடைந்ததும் விரைவாக ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாகவும், அவரது உடல் நிலை பற்றி கவலைப்படும் படியாக ஏதுமில்லை எனவும் ஹசாரேவின் உதவியாளர் தெரிவித்தார்.
...
shared via
No comments:
Post a Comment