பக்ரீத் பண்டிகை: விஜயகாந்த் 16–ந்தேதி குர்பானி வழங்குகிறார் Bakrid festival vijayakanth give Gurbani
சென்னை, அக்.14–
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இஸ்லாம் மார்க்கத்தில் பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு குர்பானி வழங்கி எல்லோரும் ஒன்றாக அன்றைய தினம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது இயல்பு. பொதுவாக இஸ்லாம் மார்க்கம் ஈகையையும், தியாகத்தையும் போற்றுவதாகும். அந்த வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது பொருத்தமான ஒன்றாகும்.
தேமுதிக சார்பில் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகையில் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு கறி வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆங்காங்கே உள்ள தேமுதிக நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமியர்களுக்கு கறி வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
தே.மு.தி.க. தலைமை கழகத்தின் சார்பில் 16–ந்தேதி புதன்கிழமை அன்று மாலை 4மணி அளவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு குர்பானி வழங்க இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய பெருமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
...
shared via
No comments:
Post a Comment