மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கோளாறால் இளம்பெண் பரிதாப சாவு
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,
ராஜபாளையம்: நடத்தையில் சந்தேகம் காரணமாக கணவனால் கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண்ணை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு ஆக்சிஜன் சிலிண்டரை அரை மணி நேரமாக திறக்க முடியவில்லை. இதற்கிடையே அந்த பெண் பரிதாபமாக இறந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சம்மந்தபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மைதீன் (32). இவரது மனைவி ராத்திகா (28). திருமணமாகி ஏழு ஆண்டுகளாகின்றன. இந்தத் தம்பதிக்கு ரூமானா (6), அகிஷா (3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மைதீன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். மனைவி ராத்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட மைதீன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதுதொடர்பாக, ராத்திகா ஊர் பெரியவர்களிடம் புகார் செய்தார். அவர்கள் அழைத்து பேசியும் மைதீன் சமாதானம் அடையவில்லை. கடந்த வாரம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் ராத்திகா புகார் செய்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மைதீன், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். ராத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மைதீன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். '108' ஆம்புலன்ஸ் மூலம் ராத்திகாவை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆக்சிஜன் சிலிண்டரை திறக்க மருத்துவ ஊழியர்கள் வெகுநேரம் முயன்றும் முடியவில்லை. இதனால் அரைமணி நேரம் உயிருக்கு போராடிய ராத்திகா உயிரிழந்தார். ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதீனை கைது செய்தனர்.
The post மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கோளாறால் இளம்பெண் பரிதாப சாவு appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
No comments:
Post a Comment