பாகிஸ்தானில் மாயமான சிங்கப்பூர் அழகு ராணியின் பிரேதம் கண்டுபிடிப்பு Singapore beauty queen body found in Pakistan
Tamil NewsToday,
இஸ்லாமாபாத், அக்.16-
பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி ஃபெஹ்மினா சவுத்ரி(27). சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சொத்து ஒன்றை வாங்குவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றார்.
அங்கு வசிக்கும் தனது தாயாருடன் செல்போன் மூலம் பேசி தான் இஸ்லாமாபாத் வந்திருக்கும் தகவலை தெரிவித்த அவரது செல்போன் சிறிது நேரத்திற்கு பிறகு சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது.
சில மணி நேரங்கள் கழித்து அவரது செல்போனில் இருந்து தாயாருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சில் ஃபெஹ்மினா சவுத்ரி கடத்தப்பட்டதாக தகவல் வந்தது.
இதனையடுத்து, தனது மகளை யாரோ கடத்தி விட்டதாக அவர் போலீசில் புகார் அளித்தார். கடந்த 5 நாட்களாக அவரை கண்டுபிடிக்க விசாரணை நடத்திவந்த போலீசார் இறுதியாக அவருக்கு சொத்து வாங்கிதர ஏற்பாடு செய்த புரோக்கரை கண்டுபிடித்து கைது செய்து விசாரித்தனர்.
ஃபெஹ்மினா சவுத்ரியை கொலை செய்து இஸ்லாமாபாத் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஓடையில் பிணத்தை தூக்கி வீசிவிட்டதாக புரோக்கர் வாக்குமூலம் அளித்தார்.
அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஓடை கரையோரம் ஒதுங்கியிருந்த பிணத்தை கைப்பற்றினர்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment