காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி தொடர்ந்து கவலைக்கிடம் kanchipuram student suicide try hospital treatment
Tamil NewsToday,
காஞ்சீபுரம், அக். 16–
காஞ்சீபுரத்தையடுத்த அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் சினேகா (11). பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சினேகா 6–வது வகுப்பு படித்து வந்தார். ஆயுத பூஜை–விஜயதசமி விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிக்கு சென்றாள்.
காலை பள்ளி இடைவேளையின் போது மாணவி சினேகா கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் 'ஐயோ என்னை காப்பாற்றுங்கள்' என்று மாணவியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடிச் சென்றனர். அப்போது மாணவி உடலில் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அணைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சீபுரம் ஆஸ்பத்திரியில் மாணவி சினேகாவுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி சினேகாவுக்கு 40 சதவீத தீக்காயம் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மாணவி சினேகா அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
மாணவி சினேகா பள்ளிக்கு செல்லும் போதே பிளாஸ்டிக் பாட்டிலில் அரை லிட்டர் மண்எண்ணை, தீப்பெட்டி கொண்டு சென்றதாகவும், மாணவியே கழிவறையில் வைத்து உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாணவி பேச முடியாத நிலையில் உள்ளதால் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
முகம், கழுத்து, உடம்பு பகுதியில் பலத்த தீக்காயம் உள்ளது. தீக்காயம் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. மாணவி பேசத் தொடங்கிய பிறகே வாக்குமூலம் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே தீக்குளிப்புக்கான காரணம் தெரிய வரும்.
மாணவிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவர் கூறியதாவது:–
40 சதவீத அளவுக்கு தீக்காயம் உள்ளது. தீக்காயம் ஆழமாக இருப்பதால் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. மாணவியின் முகம், மார்பு, இரண்டு கைகள் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கண் இமை கருகி விட்டது. என்றாலும் கண்பார்வை நன்றாக உள்ளது. ஆபத்தான நிலையில்தான் இருக்கிறாள். காப்பாற்ற முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment