தினசரி செய்திகள்

Friday, October 18, 2013

அமெரிக்க கப்பல் ஊழியர்களை 31 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு america marines 31 th date jail

அமெரிக்க கப்பல் ஊழியர்களை 31 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு america marines 31 th date jail

தூத்துக்குடி, அக். 18-

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த ''சீ மேன் கார்டு ஓகியோ'' என்ற அமெரிக்க ரோந்து கப்பலை தூத்துக்குடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 12–ந்தேதி மடக்கி பிடித்தனர். அந்த கப்பலில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. பின்னர் அந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வந்த கியூ பிரிவு போலீசார், கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் என 34 பேரை இன்று கைது செய்தனர். கப்பலில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் அவர்கள் அனைவரும் இன்று மாலை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 31-ம் தேதி வரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர்.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts