தினசரி செய்திகள்

Wednesday, October 16, 2013

ஒடிசாவில் புயல் பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கி 1 லட்சம் பேர் தவிப்பு odisha storm damage flood trap 1 lakh people anxiety

ஒடிசாவில் புயல் பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கி 1 லட்சம் பேர் தவிப்பு odisha storm damage flood trap 1 lakh people anxiety

Tamil NewsToday, 19:35

புவனேசுவரம், அக். 16–

வங்கக்கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசாவை தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 16,487 கிராமங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புயல் நடத்திய கோரத் தாண்டவத்தில் 3½ லட்சம் வீடுகள், 6½ லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாயின. மொத்தத்தில் பாய்லின் புயலால் ஒடிசா மாநிலத்துக்கு ரூ.2400 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கு இன்று (புதன்கிழமை) 4–வது நாளாக மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. புயலுக்கு பயந்து வெளியேற்றப்பட்ட சுமார் 9 லட்சம் பேரில் 90 சதவீதம் பேர் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டனர்.

புயல் கரையைக் கடந்த போது பெய்த பலத்த மழை வெள்ளத்தில் சுமார் 1½ கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 1 லட்சம் பேர் நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவித்தப்படி உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

நேற்றிரவு வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒடிசா முதல்–மந்திரி நவின் பட்நாயக் நேற்று விமானத்தில் பறந்து பார்வையிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

பாய்லின் புயலை ஒடிசா மாநில நிர்வாகம் எதிர் கொண்ட விதத்துக்கும், மீட்புப் பணிகளை திறம்பட செய்து வருவதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் நவீன் பட்நாயக்குக்கு பாராட்டுக்கள் குவிந்தபடி உள்ளது.

ஐ.நா சபை சிறப்பு பிரதிநிதி வெளியிட்டுள்ள செய்தியில், ''பேரிடர் ஆபத்தை ஒடிசா அரசு கையாண்ட விதம் உலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.

...
Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts