தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Fishermen must take action to release Prime Minister to Jayalalitha letter
Tamil NewsToday,
சென்னை, அக். 15-
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். சமீபத்தில் மேலும் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. 14-10-2013 அன்று 5 படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 4 விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 15 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இலங்கையின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இதுவரை கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. சமீபத்தில் உள்துறை மந்திரி இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது, தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரை உடனடியாக அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. ஆனால், தமிழக மீனவர்கள் விஷயத்தில் அதற்கு மாறாக நிராகரிக்கும் அணுகுமுறையை கொண்டுள்ளது.
இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும் என்று கூறுவது மத்திய அரசு மெத்தனமாக இருப்பதையே காட்டுகிறது.
எனவே, இப்பிரச்சினையில் பிரதமர் நேரடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment