நஸ்ரியா மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ?
by admin
TamilSpy
மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ! ஆதரவு திரட்டும் நஸ்ரியா!!
நய்யாண்டி படத்தில், நஸ்ரியாவின் தொப்புளை பல கோணங்களில் படமாக்கியிருக்கிறார் சற்குணம். ஆனால், அந்த பாடல் காட்சி சம்பந்தப்பட்ட நஸ்ரியாவின் பார்வைக்கு சென்றபோதுதான் அதிர்ச்சியடைந்தவர் விஸ்வரூபம் எடுத்தார்.
அவர் ஆடிய கோரதாண்டவ ஆட்டத்தில் நய்யாண்டி யூனிட்டே ஆடிப்போனது. எங்கு படத்தை குறிப்பிட்ட நாளில் வெளியிட முடியாமல் போய் விடுமோ என்று பயந்தவர்கள், பின்னர் நஸ்ரியாவின் வழிக்கே இறங்கி வந்து, நஸ்ரியாவின் தொப்புள் போன்று படமாக்கியிருநத அந்த டூப் தொப்புள் இடம்பெற்ற பாடல் காட்சியை பாதிக்கு மேல் கத்தரி வைத்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.
இதனால் நஸ்ரியா பக்கம் நியாயம் இருந்திருக்கிறது என்று பலர் கருதினாலும், இன்னும் சிலர் போயும் போயும் தொப்புளை படமாக்கியதற்காகவா இவ்வளவு அக்கப்போர்.
இவரெல்லாம் எதற்காக நடிக்க வர வேண்டும் என்று உரக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இத்தோடு கோடம்பாக்கத்தில் தனது ஆட்டம், ஆட்டம் கண்டு விடுமோ என்று அதிர்ச்சியில் இருக்கிறார் நஸ்ரியா.
மேலும், தனது அபிமானத்திற்குரிய சில ஹீரோ மற்றும் டைரக்டர்களை சந்தித்து தன்பக்க நியாயத்தை எடுத்துரைத்து வரும் நஸ்ரியா, இதை போனால் போகட்டும் என்று நான் விட்டிருந்தால் அதன்பிறகு படத்துக்குப்படம் இந்த டூப் விவகாரம் தலைதூக்கி விடும்.
அதற்காகத்தான் ஆரம்பத்திலேயே செக் வைத்தேன் என்று சொல்லி, தன்னை தொடர்ந்து ஆதரிக்குமாறும் கேட்டுக்கொண்டு வருகிறார் நஸ்ரியா.
Show commentsOpen link
No comments:
Post a Comment