தினசரி செய்திகள்

Friday, October 18, 2013

இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்புக்கு பிறகு போர்நிறுத்த மீறல் அதிகரிப்பு: உமர் அப்துல்லா Ceasefire violations worse after PM Sharif meeting Omar Abdullah

இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்புக்கு பிறகு போர்நிறுத்த மீறல் அதிகரிப்பு: உமர் அப்துல்லா Ceasefire violations worse after PM Sharif meeting Omar Abdullah

ஸ்ரீநகர், அக். 18-

போர் ஒப்பந்த உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான் ராணுவம், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் கடந்த மாதம் சந்தித்து பேசிய பிறகுதான் பாகிஸ்தான் படைகளின் போர்நிறுத்த மீறல் அதிகரித்துள்ளது" என்றார்.

இத்தகைய தாக்குதல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம்தான் என்ன? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது பிரதமர், பாகிஸ்தான் பிரதமரை நியூயார்க்கில் சந்தித்தபோது இதுபற்றி பேசப்பட்டது. அப்போது, இரு நாடுகளின் ராணுவ தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக நிலைமை மோசமாகிவிட்டது.

பாகிஸ்தானுடன் இந்திய அதிகாரிகள் வலுவான பேச்சுவார்த்தையை முன்வைக்க வேண்டும். நிலைமை மோசடைந்தால், பேச்சுவார்த்தையை தொடருவது மிகவும் கடினமாகிவிடும். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் என்றும் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts