அனிருத் இசையில் விஜய் பாடல்!
by admin
TamilSpy
தனது முதல் படத்திலேயே மொத்த இந்திய திரையுலகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய அனிருத் சமீபத்தில் வணக்கம் சென்னை திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என மூன்று தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறார்.
வெற்றிகளின் மூலம் முருகதாஸ்-விஜய் இணையவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்திருக்கிறது. விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் பாடிய 'கூகிள் கூகிள்' பாடல் மாதிரியே தனது இசையிலும் விஜய்யை பாடவைக்க வெண்டும் என அனிருத் முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக பல டியூன்களை கம்போஸ் செய்துகொண்டிருக்கிறாராம் அனிருத்.
சாதாரணமாகவே விஜய் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு ஒரு மாஸ் இருக்கும். இதில் அனிருத்தின் துடிப்பான இசையும் சேர்ந்து ரசிகர்களை கிரங்கடிக்கப்போவது உறுதி என திரையுலகத்தில் பேசப்பட்டுவருகிறது.
Show commentsOpen link
No comments:
Post a Comment