சென்னையில் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது: ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் dengue fever and chikungunya fever spreads in chennai special wards in the hospital
சென்னையில் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அதிகப்பேர் செல்ல தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் விதமாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் ஒருவித ஏடிஎஸ் எனப்படும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் ஏற்படுகிறது.
இந்த கொசுக்கள் கடித்தால் அதன் உடலில் உள்ள வைரஸ் மனிதர்களின் உடலில் சென்று டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது முதல் தடவை குணமாகிவிடும். டெங்கு காய்ச்சல் 2–வது முறை ஒரு நபருக்கு வந்தால் அவர் அலட்சியமாக இருக்கக்கூடாது.
உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த சென்னை அரசு மருத்துவமனைகளில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பெண்களுக்கு என்று 15 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், ஆண்களுக்கு என்று 5 படுக்கைகள் கொண்ட தனி வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் இருக்கிறது.
உயிர் சேதம் இல்லை
அதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் வே.கனகசபை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த ஓராண்டுகளாக டெங்கு காய்ச்சலால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
ஏனென்றால் அதற்கான மருந்துகளை நாங்கள் உரிய நேரத்தில் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
மேலும் பொது மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகிறோம்.
அதே போல், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு குழந்தைகளுக்கு என்று தனி வார்டும், பெரியவர்களுக்கு என தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருந்துகள் தேவைக்கு ஏற்றாற்போல் வைத்திருப்பதாகவும் மருத்துவமனை டீன் டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தனி வார்டு அமைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை டீன் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:–
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் பாதிப்பை உணர்ந்து கொள்ளாமல் தங்களது வீட்டின் அருகே இருக்கும் மருந்து கடைகளில் மாத்திரைகளை சாப்பிட்டு அந்த நேரங்களில் காய்ச்சலை தடுத்து விடுகின்றனர்.
ஆனால் அதன் பாதிப்பு பின்னர் தான் அவர்களுக்கு தெரிய வரும். இதனால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏறபட வாய்ப்புண்டு. எனவே உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தங்களது உடலை பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment