தினசரி செய்திகள்

Friday, October 18, 2013

தேவர் ஜெயந்தி விழாவின்போது பெட்ரோல் பாட்டில் வீச்சு: தீக்காயம் அடைந்த 10 பேருக்கு அரசு வேலை ஜெயலலிதா jayalalitha announcement thevar jayanthi festival petrol bottle throw injured 10 people government job

தேவர் ஜெயந்தி விழாவின்போது பெட்ரோல் பாட்டில் வீச்சு: தீக்காயம் அடைந்த 10 பேருக்கு அரசு வேலை ஜெயலலிதா jayalalitha announcement thevar jayanthi festival petrol bottle throw injured 10 people government job

சென்னை, அக். 18–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

30.10.2012 அன்று மதுரை மாவட்டம், எஸ். புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, மதுரை வட்டம், சிந்தாமணி கிராமம் புறவழிச் சாலை அருகே திரும்பிக் கொண்டிருந்த போது, திடீரென எரியூட்டப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை சில சமூக விரோதிகள் எறிந்ததையடுத்து அவ்வாகனத்தில் பயணம் செய்த அனைவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் இறந்த 7 பேர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், தீக்காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நான் வழங்கினேன்.

தற்போது, 20 விழுக்காட்டிற்கு மேல் தீக்காயம் அடைந்தவர்கள் தங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த நான் அவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உரிய பணி விதிகளை தளர்த்தி, பாதிக்கப்பட்டவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 6 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கிடவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்கிடவும், எழுதப் படிக்கத் தெரிந்த 3 நபர்களுக்கு இரவுக் காவலர் பணி வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts