தினசரி செய்திகள்

Monday, October 14, 2013

தசரா விழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு சூரசம்ஹாரம் kulasekarapattinam dasara festival surasamharam

தசரா விழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு சூரசம்ஹாரம் kulasekarapattinam dasara festival surasamharam

உடன்குடி,அக்.14–

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கடந்த 5–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலித்தனர். சுமார் 500–க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கரகாட்டம், குறவன்– குறத்தி ஆட்டம், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். இதனால் நெல்லை– தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன.

தசரா திருவிழாவின் 9 நாட்களும் அம்மனுக்கு காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பகலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. மேலும் கோவில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வேடமணிந்த பக்தர்கள் குழு, குழுவாக லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களில் வந்து குவிகின்றனர். குலசேகரன்பட்டினத்தில் எங்கு பார்த்தாலும் வேடமணிந்த பக்தர்கள் காணப்படுகின்றனர். ஆங்காங்கே தசரா குழுவினர் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதனால் குலசை விழாக்கோலம் பூண்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts