தினசரி செய்திகள்

Wednesday, October 16, 2013

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பதவி பறிப்பில் சிக்கல் நீடிப்பு corruption case lalu flush position problem Extension

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பதவி பறிப்பில் சிக்கல் நீடிப்பு corruption case lalu flush position problem Extension

Tamil NewsToday,

புதுடெல்லி, அக். 16–

பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் முதல்–மந்திரியாக இருந்தபோது ரூ. 956 கோடிக்கு கால்நடை தீவன ஊழல் நடந்தது. 17 ஆண்டுகளாக நடந்த இந்த ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்ற வழக்குகளில் சிக்கி இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. எனவே ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிக்கப்படுகிறது.

ஆனால் பதவி பறிப்பு நடவடிக்கையை அதிகாரப் பூர்வமாக எடுப்பது யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இதுபற்றி நிபுணர்களிடம் பேசி கருத்து தெரிவிக்குமாறு சட்ட அமைச்சகத்திடம் சபாநாயகர் மீராகுமார் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஆய்வு செய்த சட்ட அமைச்சகம், எம்.பி.யோ, எம்.எல்.ஏ.வோ 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றால், அவர்களது பதவி தானாகவே பறிபோய் விடும் என்று கூறியது. ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக வெளியில் சொல்லாமல் மவுனம் சாதித்தப்படி உள்ளது.

இதனால் லல்லுவின் எம்.பி. பதவியை பறித்து, அதற்கான அறிவிப்பை வெளியிடுவது யார் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதற்கு பொறுப்பு ஏற்காமல் ஒவ்வொரு அமைச்சகமும் தட்டி கழித்து வருகின்றன.

...
Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts