சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு Sabari malai temple tomorrow open
சபரிமலை, அக்.15-
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை (16-ந் தேதி) மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், ஓணம், விஷு பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும்.
எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். ஐப்பசி மாத பூஜைஅதன்படி, ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை, நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். நடை திறப்பதையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.புதிய மேல்சாந்தி தேர்வுமறுநாள் (17-ந் தேதி) சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புறம் அம்மன் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுகிறது. அன்று முதல், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல பூஜை -வழிபாடுகள் நடைபெறுகிறது.
17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசபூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment